முகநூலில் சிலர் தங்களைப்பற்றியும் தேவையில்லாத விசயங்களைப் பற்றியும் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கையில் எரிச்சலாக வரும்..சிலர் மட்டும் நல்ல நல்ல செய்திகளை வெளியிடுவார்கள். கரிகால் சோழனின் பேரன் தமிழ் ஈழம் எனும் முகநூல் நண்பர் நல்ல நல்ல செய்திகளை வெளியிடுகிறார்...அவர் இன்று வெளியிட்ட இரண்டு செய்திகள் கீழே...ள்...(நன்றி...கரிகால் சோழன் பேரன் தமிழ் ஈழம்)
1. அடக்குமுறை
திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர்.
“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
- என்கிறது அகிலத்திரட்டு.
இந்த 18 ஜாதியினரும் உயர் ஜாதியினரான நம்பூதிரிகள், நாயர் (மேனன்), பட்டன், தம்புரான், தம்பி, பிள்ளைமார் மற்றும் பிராமணர்களுடன் பேசும் போதும், அவர்கள் வசிக்கும் பகுதி அருகில் செல்ல நேரும் போதும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனி வரைமுறையே உருவாக்கப்பட்டது. அத்தனையும், கொடூரமானவை! இதனால்தான், அன்றைய கேரளாவை "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னார் போலிருக்கிறது.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சில இடங்களுக்குச் செல்லும் போது, உயர் சாதிப் பெண்கள் வசித்த அம்ம வீடு மற்றும் உள்ளிருப்பு வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வு என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல; இரண்டு அல்லது மூன்று நாளில் தொடங்கி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும். அப்போது, அந்த வீட்டுப் பெண்கள் மன்னரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்தத் தொடர்பில் ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள், நாயர் உள்ளிட்டவர்கள் மன்னருடன் நெருக்கமாய் இருந்தனர்.
மன்னருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான ஓய்விற்கு பிரதிபலனாக பல சலுகைகளை உயர் சாதியினருக்கு வழங்கினார். அந்த ஆதிக்க ஜாதியினர் வசித்த பகுதியில் இருந்த விளைநிலங்கள், வருவாய்த்துறை மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரத்தால், உயர் சாதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக அறிவிக்கப்பட்டவர்ளைக் குற்றவாளியாக்கி குறுநில மன்னர்கள் போல் தீர்ப்பு வழங்கவும், தண்டனை கொடுக்கவும் தொடங்கி விட்டனர்

No comments:
Post a Comment